Showing posts with label child. Show all posts
Showing posts with label child. Show all posts

Monday, September 5, 2011

Irrational Thinking பகுத்தறியாத சிந்தனை








பகுத்தறியாத சிந்தனை

( irrational thinking )

அவர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் நல்ல சிந்தனையாளர், அவருக்கு 4 பிள்ளைகள், அவரிடம் இரு கேள்விகள் கேட்கப்பட்டது.

குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதி, உங்கள் பிள்ளைகளில் ஒரு பிள்ளையை கேட்டால் அவர்களுக்கு நீங்கள் தத்து கொடுப்பீர்களா ?
தாமதிக்காமல் பதில் வந்தது மாட்டேன் என்று!

சரி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வைத்துக்கொள்வோம், இப்போது நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுப்பீர்களா ? கண்டிப்பாக தத்தெடுப்பேன் என்றார்!

என்ன ஒரு மன முரண்..
அவர் செய்ய மாட்டார் ஆனால் மற்றவர்கள் செய்தாக வேண்டும் அல்லது அவர் செயவார் மற்றவர்கள் செய்யக்கூடாது.
இது சுயநலமான சிந்தனை இல்லையா ? தமக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று வாழும் சுயநலவாதிகளுக்கு நடுவில் வாழ்கிறோம்.
இப்படி ஒரு சுயநலமான சிந்தனை இருப்பதை மறந்துவிட்டோமா அல்லது தெரியாதா ?

தெரியாது என்று சொல்ல முடியாது, ஆனால் அதை மறந்துவிட்டோம் என்பதே தெரியாது எனறுதான் சொல்ல வேண்டும்.
மறந்துவிட்டோம் என்பதை அறிந்துகொண்டாலே போதும் ஞாபகம் வந்துவிடும்.